நானும் அமலாபாலும் விவாதத்துக்கு தயார் - லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு 'ஆடை' பட இயக்குநர் பதில்

news18
Updated: July 22, 2019, 8:14 PM IST
நானும் அமலாபாலும் விவாதத்துக்கு தயார் - லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு 'ஆடை' பட இயக்குநர் பதில்
அமலாபால் மற்றும் இயக்குநர் ரத்னகுமார்
news18
Updated: July 22, 2019, 8:14 PM IST
'ஆடை'  படம் குறித்த விவாதத்துக்கு தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இயக்குநர் ரத்னகுமார் பதிலளித்துள்ளார்.

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட தனது நண்பர்களுடன் வெளியே செல்லும் அமலாபால், ஆடையின்றி ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கடந்த 20-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆடையின்றி நடித்த அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? என்று அமலாபால் மற்றும் படத்தின் இயக்குநருக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ஆடை படத்துக்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன். உங்களுடைய கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக நடிகராக அல்ல. ஒரு பெண்ணின் தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என்று கூறியிருந்தார்.

Loading...




லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தக் கேள்விக்கு ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் பதிலளித்துள்ளார். அதில், உங்களது பாராட்டுக்கு நன்றி. நான் எப்போதும் விவாதத்துக்கு தயார். அமலாபாலும் தயார். அந்த விவாதத்தை நாம் வீடியோவாக எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: பிகில் லீக்கானது எப்படி?

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...