Home /News /entertainment /

பாலு எங்க போன? ஏன் போன? இளையராஜா உருக்கமான வீடியோ

பாலு எங்க போன? ஏன் போன? இளையராஜா உருக்கமான வீடியோ

எஸ்.பி.பி - இளையராஜா

எஸ்.பி.பி - இளையராஜா

RIP SPB | எஸ்.பி.பி மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன் ஆனால் நீ கேட்கல என பாகடர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

    அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்று முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நீண்ட நாள் நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன் ஆனால் நீ கேட்கல என்றுள்ளார்.



    மேலும் நீ போன பின் இந்த உலகமே எனக்கு சூனியமாக தெரிகிறது. பேசுவதற்கு பேச்சு வரல, சொல்வதற்கு வார்த்தை இல்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. ஆனா இதுக்கு இல்லை“ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி