Ileana D’Cruz: ’நான் கர்ப்பமாக இருந்தேனா?’ இலியானா ஓபன் டாக்!

Ileana D’Cruz: ’நான் கர்ப்பமாக இருந்தேனா?’ இலியானா ஓபன் டாக்!

இலியானா

உண்மையில் இது போன்ற விஷயங்களை எழுதினார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

  • Share this:
    நடிகை இலியானா டி க்ரூஸ் தான் போலி செய்திகளால் பாதிக்கப்பட்டது குறித்து பேசினார். அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் தன்னைப் பற்றி வெளியாக வதந்திகள் குறித்தும். தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட பொய் செய்தி குறித்தும் சமீபத்திய நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார்.

    சமீபத்திய நேர்க்காணலில் இலியானா பற்றிய போலி செய்திகளைப் பற்றி கேட்கப்பட்டது. அதர்கு பதிலளித்த அவர், "ஒரு சில உள்ளன. நான் கர்ப்பமாக இருந்தேன், கருக்கலைப்பு செய்தேன் என்றெல்லாம் சொன்னார்கள். உண்மையில் இது போன்ற விஷயங்களை எழுதினார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. இது வினோதமானது,” என்றார்.

    மேலும் தொடர்ந்த அவர், "நான் தற்கொலை செய்து கொண்டதாக மற்றொரு தகவலும் வந்தது. நான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், உயிர் பிழைத்ததாகவும், என் வேலைக்காரி செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் எனக்கு வேலைக்காரியே இல்லை, நான் தற்கொலைக்கு முயற்சிக்கவும் இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன். இதுபோன்ற தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது” என்று அவர் மேலும் கூறினார்.

    2018-ஆம் ஆண்டில், இலியானா தனது முதல் குழந்தையை அப்போதைய காதலன் ஆண்ட்ரூவுடன் எதிர்பார்ப்பதாக நிறைய ஊகங்கள் இருந்தன. இருப்பினும், அவர் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: