Home /News /entertainment /

லட்சுமி ராமகிருஷ்ணனின் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

லட்சுமி ராமகிருஷ்ணனின் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

லட்சுமி ராமகிருஷ்ணன் - இளையராஜா

லட்சுமி ராமகிருஷ்ணன் - இளையராஜா

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

    நடிகையாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 'ஆரோகணம்' என்ற அவரது முதல் படத்திற்குப் பிறகு, 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' ஆகியப் படங்களை இயக்கினார் லட்சுமி.

    இந்தப் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை. இப்போது, ​​அவரது அடுத்தப் படத்துக்காக இளையராஜாவுடன் கைக்கோர்த்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இசைஞானியுடன் ரீ-ரெக்கார்டிங்கில் அமர ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.





    பாதுகாப்பில்லை, பல லட்சம் சம்பள பாக்கி... ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகிய மனிஷாஜித்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து இசைஞானி இளையராஜாவுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன், "புகழ்பெற்ற மேஸ்ட்ரோ படத்தில் இருப்பது பாக்கியம்!என்ன ஒரு அனுபவம் இது!! எனது அடுத்தப் படத்தின் RR அமர்வுகளுக்காக காத்திருக்கிறேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ilayaraja

    அடுத்த செய்தி