Home /News /entertainment /

‘கமலின் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது’ – நெகிழ்ச்சியுடன் வாழ்த்தும் இளையராஜா

‘கமலின் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது’ – நெகிழ்ச்சியுடன் வாழ்த்தும் இளையராஜா

இளையராஜா - கமல் ஹாசன்

இளையராஜா - கமல் ஹாசன்

Ilayaraja on Kamal : இளையராஜாவின் இந்த பதிவு கமல் மற்றும் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    விக்ரம் படத்தின் வெற்றியால் உற்சாகத்துடன் கமல் காணப்படும் நிலையில், அவரை இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளார். இளையராஜாவின் ட்விட்டர் பதிவு கலைஞானி, இசைஞானி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    விக்ரம் படத்தின் முதல் பாகம் 1986-ல் வெளியானபோது அந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தபடத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகின. குறிப்பாக விக்ரம்  தீம் மியூசிக் மிரட்டலாக அமைந்திருந்தது.

    அதனை சற்று மாற்றி, லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் அடுத்த பாகத்தில் பயன்படுத்தியிருப்பார். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என நடிப்பு அசுரர்கள் இந்த படத்தில் இணைந்திருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு இந்தப் படம் பூர்த்தி செய்தது. இதனால் ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் இன்றளவும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இதையும் படிங்க - பீஸ்ட் சாதனையை முறியடிக்குமா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? புயல் வேகத்தில் லைக் – ரீ ட்வீட் 

    கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கமலுக்கு கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

    இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியால் கமல் அதீத உற்சாகத்துடன் காணப்படுகிறார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பல்வேறு நபர்களை கமல் சந்தித்து பேசி விட்டார்.

    இதையும் படிங்க - தளபதி - தல கூட்டணியில் அடுத்த படம்? கோலிவுட்டில் உலாவரும் செய்தி! 

    இயக்குனர் லோகேஷிற்கு லெக்சஸ் கார், உதவி இயக்குனர்களுக்கு அபாச்சி பைக், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பரிசளித்த கமல், வெற்றி விழாவில் விருந்து வைத்து அசத்தினார்.

    கமலின் இந்த உற்சாகத்தை பார்த்த இசைஞானி, ‘கமலின் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது’  என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    இளையராஜா தனது ட்விட்டர் பதிவில், ‘வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்.’ என்று கூறியுள்ளார்.

    இளையராஜாவின் இந்த பதிவு கமல் மற்றும் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Ilayaraja, Kamalhaasan

    அடுத்த செய்தி