ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இளையராஜா தமிழ்நாட்டிற்கு கிடைத்த சொத்து.. இயக்குநர் பாரதிராஜா பெருமிதம்!

இளையராஜா தமிழ்நாட்டிற்கு கிடைத்த சொத்து.. இயக்குநர் பாரதிராஜா பெருமிதம்!

இளையராஜா - பாரதிராஜா

இளையராஜா - பாரதிராஜா

இளையராஜா நீடூழி வாழ்ந்து இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என பாரதிராஜா வாழ்த்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இளையராஜா தமிழ்நாட்டிற்கு கிடைத்த சொத்து என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையின்  இசையமைப்பாளர் இளையராஜா நாடாளுமன்ற எம்.பிஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது குறித்து அறிவிப்பு வாரியர் பட விழாவில் பாரதிராஜா கலந்துகொண்டு மேடையில் பேசிகொண்டிருந்த போது வெளியானது. அந்த தகவலை பாரதிராஜாவின் கவனத்திற்கு அவரின் உதவியாளர் கொண்டு சென்றார். அதை தொடர்ந்து பேசிய பாரதிராஜா, ”இளையராஜா என் நண்பன். 50 வருடமாக நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். அவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த சொத்து. இன்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க தலைவர் கைது

சினிமா கலைஞர்கள் எவ்வளவு கவுரவிக்கப்படுகிறார்கள் பாருங்கள். அந்த அளவிற்கு சினிமா கொண்டு செல்கிறது.  இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்காது” என கூறினார். அத்துடன் இளையராஜா நீடூழி வாழ்ந்து இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

வெள்ளிக்கிழமை வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட டீசர்!

அதேபோல் வாரியர் பட விழாவில் பங்கேற்ற  இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்,  இசைஞானி இளையராஜா எம்.பி ஆகிவிட்டார் என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு MP, அதாவது Musical Paradise  என பெருமைப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Parthiban, Bharathiraja, Ilayaraja, Kollywood, Tamil Cinema