ஆடு பகை, குட்டி உறவு என்ற பழமொழி போல தற்போது இளையராஜா - யுவன் சங்கர் ராஜாவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்பட்டிருக்கின்றன.
தமிழ் சினிமா இசைஞானி என கொண்டாடும் இளையராஜா தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் ஆதர்ச நாயகனாக விளங்குகிறார். தமிழ் மக்கள் ஒரு நாளைக்கூட இளையராஜா இல்லாமல் கடந்து போக முடியாது, என்ற சூழல் தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.
இந்நிலையில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும், இளையராஜா ஒப்பீடு செய்து எழுதியிருந்த முன்னுரை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இளையராஜா இப்படி கூறலாமா? என ஒரு தரப்பும், இளையராஜா எப்படிக் கூறலாம்? என இளையராஜாவுக்கு எதிராக ஒரு தரப்பும் புறப்பட, இளையராஜாவுக்கும் ஒரு கருத்து இருக்கும் அவரும் கருத்து கூறலாம் என்று, மூன்று வகையான கருத்துக்கள் தற்போது இளையராஜாவின் முன்னுரையை தொடர்ந்து பெரும் கட்டுரையாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இளையராஜாவின் இந்த முன்னுரைக்கு அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவே முடிவுரை ஒன்றையும் எழுதி இருக்கிறார். இளையராஜா எழுதிய கட்டுரை வலதுசாரி சிந்தனையுடன் அமைந்த நிலையில், டார்க் திராவிடன் என்ற அடைமொழியுடன் பெருமைமிகு தமிழன் என்ற வாசகத்துடன் யுவன் சங்கர் ராஜா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த விவாதத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.
கே.ஜி.எஃப் முதல் இரண்டு பாகமும் மாபெரும் வெற்றி... அடுத்த பாகத்தின் வேலைகள் தொடக்கம்!
ராஜாவின் கருத்திற்கு எதிராக தனது நிலைப்பாட்டை பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இப்படி புகைப்படத்தை பதிவு செய்தாரா என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், அவரின் தமிழ் பற்று பற்றி கேள்வி கேட்க முடியாத அளவிற்கு ஒரு முன்னோட்டத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளார் யுவன். ஏற்கனவே இந்தி தெரியாது போடா என்ற அடைமொழியுடன் யுவன் சங்கர் ராஜா ஒரு டீ-சர்ட் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட, அது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.
குக் வித் கோமாளி மணிமேகலையின் காஸ்ட்லி பைக் திருட்டு... கஷ்டப்பட்டு சம்பாதித்து வாக்கின பைக் என உருக்கம்
இந்தி தெரியாது போடா என்ற அந்த வாசகம் டிவிட்டரில் உலக அளவில் ட்ரண்ட் ஆனதோடு, ஆங்கில ஊடக விவாதங்களிலும் இடம்பெறும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது. மேலும் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த யுவன் சங்கர் ராஜா, இந்தி தெரியாது போடா எனக் கூற என்ன காரணம் என கேள்வி எழுப்பப்பட்ட போது, தான் ஏர்போர்ட்டில் அவ மரியாதை செய்யப்பட்டது குறித்து பேசி இருந்தார். விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் இந்தியில் பேசுமாறு வலியுறித்தியதாகவும், அதற்கு இந்தி தெரியாது என அவர் கூறியதற்கு, இந்தியனாக இருந்துகொண்டு இந்தி தெரியாமல் இருந்தால் எப்படி என பதில் கேள்விகளை எதிர் கொண்டதாகவும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.
எனவே ஏ.ஆர் ரகுமானை போல ஹிந்திக்கு எதிராக ஒரு வலுவான கருத்தை கொண்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா, தற்போது தனது தந்தை மத்திய அரசுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது, அதற்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் தனது திராவிட நிலைபாட்டையும் உறுதி செய்யும் வகையிலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.