இளையராஜாவின் இசையும் மழையும் இணைந்து இசை ரசிகர்களை நனைய வைத்த பாடல்களை பற்றிய ஒரு தொகுப்பு.
பாயும் புலி’ திரைப்படத்தில் கொட்டும் மழையில் குடை தேடும் ஊரில் நனைய நனைய கொண்டாட்ட ஆட்டம் போட்டனர் ரஜினிகாந்தும் ராதாவும். ‘பொத்துகிட்டு ஊத்துதடி வானம்’ என்ற அப்பாடலில் இளையராஜாவின் இசை கொட்டும் மழையை போலவே தகதிமி தகதிமி போட்டிருக்கும். ’ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க’ என வரும் மலேசியா வாசு தேவன் குரலில் திரையரங்கில் இருந்தபடியே முழுவதுமாக நனைந்தனர் ரசிகர்கள்.
அந்த தகவல் பொய், நம்பாதீங்க.. ரசிகர்களிடம் கேட்டு கொண்ட பிக் பாஸ் ராஜூ!
’பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ என குடை மறந்து ஆடிய ரஜினிகாந்தை போல் ’மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும்’ என குடையுடன் ஆட்டம் போட்டார் ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தில் கமல் ஹாசன். நிஜ மழையை இசை மழையால் நனைத்திடுவோம் என்றும்… குளிரெடுத்தால் வானத்துக்கே குடை கொடுப்போம் என்றும் கமல்ஹாசன் ஆடிய இந்த ஆட்டத்துக்கு இசையை மழையாய் பொழிந்திருந்தார் இளையராஜா.
சில மழை பாடல்களை கேட்கும் போது சாரல் முகம் வந்து அடித்து செல்லும். அப்படியான ஒரு பாடல்தான் ’புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வான் மேகம் பூப் பூவாய் தூவும்’ பாடல். ’தூரல் போடுதோ தோகை ஆடுதோ பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்’ என மழையில் தெறிக்கும் மழை சாரலிடையே ஒரு கொண்டாட்ட ஆட்டம் போட்டிருப்பார் ரேவதி.
ரசிகையின் மன அழுத்தம் மெசேஜ்.. குக் வித் கோமாளி குரேஷி கொடுத்த ரிப்ளை!
கதாநாயகிகளை மழையில் நனைய விட்டு பாடல் காட்சியை படமாக்குவதென்றால் தமிழ் இயக்குநர்களுக்கு சாய்ஸ் ரேவதிதான் என்பது போல ’மெளன ராகம்’ திரைப்படத்திலும் ’ஓஹோ மேகம் வந்ததோ’ என தோழிகளுடன் மழை ஆட்டம் போட்டிருப்பார் ரேவதி. ’யாரும் சொல்லாத காவியம், ஆடை கொண்டிங்கு ஆடுது….. நேரம் கொண்டாலென்ன பொன்னோவியம், வண்ணம் மாறாமல் மின்னுது’ என்பதை வண்ண மின்னல்களாகவும் சங்கீதமாகவும் ..சிட்டாகவும் ..செம்மீனாகவும் மழையில் அபிநயிக்கும் ரேவதியை பார்த்த திரை ரசிகர்களும் சொன்னார்கள்.
மதுவில் கிடைக்காத போதை இளையராஜாவின் இசையில் கிடைக்கும் என்பதை திரை வடிவமாக சொன்னது ‘இன்று நீ நாளை நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொன் வானம் பன்னீர் தூவுது’ பாடல். மழையில் லக்ஷ்மியும் சிவக்குமாரும் ஆடும் இந்த பாடலை கேட்ட இசை ரசிகர்கள் ஏதேதோ உணர்வுகளை கடந்து மழை செய்யும் கோளாறு பாலாறையும் கொதிக்க வைக்கும் என்பதை ஒப்புக்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.