• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இடம்பெற்ற இளையராஜா படம்..

டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இடம்பெற்ற இளையராஜா படம்..

இளையராஜா

இளையராஜா

இளையராஜா கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் ரசனையின் ஓர் அங்கமாக இருக்கிறார்.

  • Share this:
இளையராஜாவின் புகைப்படம் The Raaja of music is here என்ற வாசகத்துடன் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்ட்டில் இடம்பெற்றது உலகம் முழுவதிலும் உள்ள இளையராஜா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளையராஜா கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் ரசனையின் ஓர் அங்கமாக இருக்கிறார். அவரது இசையும், பாடல்களும் தமிழ் சமூகத்தின் உளவியல் மருத்துவராக செயலாற்றி வருகிறது. இந்த கன மழையில் தொலைக்காட்சிகளும், ரேடியோ எப்எம்களும் மழையும், ராஜாவும் என்று அவரது பாடல்களையே மணிக்கணக்கில் ஒளி/ஒலி பரப்பினர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நேரத்தை நகர்த்தவும், மனதை இலகுவாக்கவும் இளையராஜா பாடல்களே உதவின. இறந்துபோன நண்பனின் விருப்பப்படி இளையராஜாவின் பாடலைப் பாடி அவனுக்கு இறுதி மரியாதை செலுத்திய வீடியோவை அனைவரும் பார்த்திருப்பீர்கள். பிறப்பு முதல் இறப்புவரை தமிழ் மக்களை ஆகர்ஷித்து நிற்கும் மிகப்பெரிய ஆளுமை இளையராஜாவின் இசை என்றால் மிகையில்லை.

also read : நடிகை அனு இமானுவேலின் ஹாட் புகைப்படங்கள்..



also read :  38 வயதில் காதலரை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை சந்திரா..

அவரது இசை உலக அளவில் ஆஸ்கர் போன்ற அங்கீகாரத்தை பெறவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. ஆனால், தனிப்பட்டமுறையில் உலகின் புகழ்பெற்ற கம்போஸர்கள் அனைவரும் ராஜாவையும், அவரது இசையையும் அறிந்தவர்கள். நேற்றிரவு நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்ட்டில் இளையராஜாவின் புகைப்படம், The Raaja of music is here என்ற வாசகத்துடன் இடம்பெற்றது. இது உலகம் முழுவதும் உள்ள ராஜாவின் இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் ஒருவரது புகைப்படம் அத்தனை எளிதில் இடம்பெறாது. அதுவொரு கௌரவம். ராஜாவுக்கு அது கிடைத்திருக்கிறது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்,
மகிழ்ச்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: