Home /News /entertainment /

‘இளையராஜா எனும் நான்…’ – எம்.பி.யாக இசைஞானி பதவியேற்கும் வீடியோ வைரல்

‘இளையராஜா எனும் நான்…’ – எம்.பி.யாக இசைஞானி பதவியேற்கும் வீடியோ வைரல்

பதவியேற்ற பின்னர் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இசைஞானி.

பதவியேற்ற பின்னர் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இசைஞானி.

Ilayaraja MP : அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து வரும் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

    இசைஞானி இளையராஜா, மாநிலங்களவை எம்.பி.யாக இன்று தமிழில் உறுதிமொழியேற்றுக் கொண்டார். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

    நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்திருந்தார்.

    'காட்சி மொழி கவிஞன்' மகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள்!

    இந்நிலையில் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பியாக தமிழில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு  மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    எம்.பி.யாக உறுதிமொழியேற்ற இளையராஜா, ‘மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையாகவும், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றியிருப்பேன் என்றும், நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்’ என்று கூறி உறுதிமொழியேற்றுக் கொண்டார்.

    பதவியேற்பு வீடியோவை பார்க்க...



    அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து வரும் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

    ‘நடிகர் சங்க கட்டிடத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி பெயர் இடம்பெற வேண்டும்’ - விஷால் விருப்பம்

    தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. அதன் பின் 2018-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ilayaraja

    அடுத்த செய்தி