லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆர் யூ ஓகே பேபி படத்தின் ரீ-ரெக்கார்டிங்கை முடித்துவிட்டார் இசைஞானி இளையராஜா.
நடிகையாக இருந்து இயக்குநராக மாறிய லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்ததாக 'ஆர் யூ ஓகே பேபி??' என்ற படத்தை இயக்கி வருகிறார், இந்தப் படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும், ஆர் யூ ஓகே பேபி படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கை இசையமைப்பாளர் இளையராஜா முடித்துவிட்டார் என்பது தான் லேட்டஸ்ட் செய்தி.
அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், "மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுடனும் பணிவுடனும் இருக்கிறேன். அவருடைய ஆர்வம், ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் அற்புதமானது!!! இந்த லெஜெண்டிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! RR முடிந்தது, உங்களிடம் படத்தைக் காண்பிக்க காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Grateful and humbled to have got the opportunity to work with the #Maestro #Iliaraja Sir, his passion , energy and commitment is just amazing!!! So much to learn from the legend! RR is completed, can’t wait to show the film to you folks❤️ pic.twitter.com/CTcCmzyqDq
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 4, 2023
இந்தப் படத்தின் கதை ஒரு குழந்தையைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் இயக்குநர் மிஷ்கின் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி மற்றும் விருமாண்டி புகழ் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மியின் ஹோம் பேனரில் படம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.