ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெங்கட் பிரபு படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா யுவன் சங்கர் ராஜா

வெங்கட் பிரபு படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா யுவன் சங்கர் ராஜா

வெங்கட் பிரபு, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

வெங்கட் பிரபு, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

மாமனிதன் படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்தனர். கனவு நிறைவேறியது என வெங்கட் பிரபு பெருமிதம். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். 

நாக சைத்தன்யா நடிக்கும் 22வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதற்கான முதல்கட்ட வேலைகள் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நாக சைத்தன்யா - வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

இதுவரை வெங்கட் பிரபு படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா அல்லது பிரேம்ஜி அமரன் ஆகியோர் மட்டுமே இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் முதன் முறையாக இளைராஜாவுடன் கைகோற்கிறார். மேலும் இளைராஜாவுடன் இணைய வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

நாக சைத்தன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் அவருக்கு 11-வது படமாகவும், நாயகனுக்கு 22-வது படமாகவும் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

Also read... வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் கிருத்தி ஷெட்டி...!

வெங்கட் பிரபு படத்திற்கு முன்பாக விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Ilayaraja, Venkat Prabhu, Yuvan Shankar raja