டெல்லியில் உள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், '
மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" எனவும் கூறியிருந்தார். இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த இளையராஜாவின் முன்னுரை கடந்த சில நாள்களாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.
இளையராஜாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் இணையத்தில் அனல் பறந்தது. இளையராஜாவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அரசியில் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Also Read :மகாத்மா காந்தி போன்றவர் பிரதமர் மோடி - திமுக எம்.பி புகழாரம்
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பின் இளையராஜாவின் ஒரு ட்வீட்டை தற்போது பதிவிட்டுள்ளார். அதில் ரஜினி நடித்த தளபதி படத்திலிருந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், “நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கிானல் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே“ என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த ட்வீட்க்கும் கலவையான கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் இளையராஜாவை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். “பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்கள் நல்லதையும் பேச மாட்டார்கள், பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் எனர்ஜி எனக்கு பிடித்திருக்கிறது” என்று பாக்கியராஜ் தெரிவித்து இருந்தார். பாக்கியராஜின் இந்த கருத்துக்கு பலதரப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக குறைபிரசவம் என்று குறிப்பிட்டு இருந்ததால் மாற்றுத்திறனாளிகள் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனது கருத்தை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.