இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் - தெறிக்கவிட்ட தெலுங்கு தயாரிப்பாளர்

தனுஷ்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்ற புதிய பட்டத்துடன் குறிப்பிட்டிருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இளைய சூப்பர் ஸ்டார் என்று தனுஷுக்கு புதிய பட்டம் கொடுத்ததுடன், அவரது பிறந்தநாளில் அன்னதானம் அளித்து தெறிக்கவிட்டுள்ளார் தெலுங்குப்பட தயாரிப்பாளர். 

நேற்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

தனுஷ் ரசிகர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நற்பணிகள் செய்தனர். தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் பான் - இந்தியன் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. இது அவர்களின் 4 வது தயாரிப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தனுஷை ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற புதிய பட்டத்துடன் குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஹைதராபாத்தில் பேனர் கட்டி, அன்னதானமும் செய்து அசத்தினர்.

Also read... வேம்புலி ஜெயிக்கணுமா? கபிலன் வெல்லனுமா?- சார்பட்டா பரம்பரையை ரசிக்கும் உளவியல் என்ன?

ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்து விளம்பரம் செய்யும், புதிய போஸ்டர் வெளியிடும். இவர்களோ அன்னதானம் வரை இறங்கி அடித்திருக்கிறார்கள்விரைவில் சேகர் கம்முலா படத்தின் பெயர் மற்றும் விவரங்களை அறிவிக்க உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: