இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் - சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் - சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்
இசையமைப்பாளர் இளையராஜா
  • Share this:
இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள பிரச்னை தொடர்பாக சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு பகுதியில் இசை ஸ்டூடியோ அமைத்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களுக்கு இசையமைக்கும் பணியை இளையராஜா மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இசையமைத்து வந்த ஒலிப்பதிவுக் கூட இடத்தை மற்றொரு நபருக்கு ஒப்பந்தத்துக்கு விட்டுள்ளது தற்போதைய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம். இதனால் இளையராஜாவை வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது.


மேலும் படிக்க: பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இளையராஜாவுக்கு இடம் மறுக்கப்பட்டதன் பின்னணி என்ன?

இதனிடையே  இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17'வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்  என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார் இளையராஜா.

Loading...

இதைத்தொடர்ந்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அங்கு எடுக்கும் முடிவை தெரிவிக்குமாறு கூறிய நீதிபதி விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
First published: December 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...