பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இளையராஜாவுக்கு இடம் மறுக்கப்பட்டதன் பின்னணி என்ன?

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இளையராஜாவுக்கு இடம் மறுக்கப்பட்டதன் பின்னணி என்ன?
இசையமைப்பாளர் இளையராஜா
  • Share this:
45 ஆண்டுகளாக இளையராஜாவின் இசையில் கரைந்த பிரசாத் ஸ்டூடியோவின் ஒலிப்பதிவு கூடம், இன்று அவருக்கு இல்லை. 

1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் தொடங்கி, விரைவில் வெளியாகும் வெளியாகவிருக்கும் சைக்கோ திரைப்படம் வரையில், இளையராஜாவின் இசைப்பயணம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தான் இசையமைத்து வந்த இடமான பிரசாத் ஸ்டூடியோ ஒலிப்பதிவுக் கூடம் அவருக்கு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

பிரசாத் ஸ்டூடியோ ஒலிப்பதிவுக் கூடம் இளையராஜாவை விட்டு பிரிந்ததன் காரணம் என்ன?


இளையராஜாவிற்கு இடம் மறுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பவர், புகழ்பெற்ற எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய் பிரசாத் தான் என்கின்றனர் தற்போதைய நிர்வாகிகள். இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தை வேறு ஒருவருக்கு ஒப்பந்தத்திற்கு விட்டு விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த இளையராஜா தரப்பு, ஒலிப்பதிவு கூடத்துக்கு இளையராஜா முறையாக வாடகை கொடுத்து வருவதாகவும், அவரை பணி செய்யவிடாமல் பிரசாத் ஸ்டூடியோ தரப்பினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர்

இதுகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சமரசம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் எனவும், இல்லையெனில் அவருக்கான தனி இடம் அமைத்து தரப்படும் என்றும் கூறினார்

Loading...

இத்தனை ஆண்டுகாலம் இளையராஜாவின் இசையோடு பிணைந்திருந்த இடம் அவருக்கு கிடைக்குமா அல்லது வேறு இடம் அமைத்துத் தரப்படுமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
First published: December 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...