இசைக்கருவிகள் திருடி விற்கப்படுகின்றன - பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார்

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய் பிரசாத் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

இசைக்கருவிகள் திருடி விற்கப்படுகின்றன - பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார்
இசையமைப்பாளர் இளையராஜா
  • Share this:
இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வருகிறார். அங்கு அவருக்கான தனி தியேட்டரை பிரசாத் நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்திருந்தது. இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்திருந்தார்.

தற்போது பிரசாத் ஸ்டுடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இளையராஜாவுக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த ஸ்டுடியோவை இடித்துவிட்டு, மாற்று தியேட்டர் கொண்டுவர நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தலைமையில் திரையுலகினர் ஒன்றுகூடி இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்திருக்கிறேன். ஸ்டுடியோவுக்கு வாடகை கொடுக்க தயாராக இருக்கிறேன். இட உரிமை தொடர்பாக இருதரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கெனவே 17-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.


இரு தரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்படாததால் கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் புதிதாக இளையராஜா ஸ்டுடியோ அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது கோவிட்19 காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இதனை பயன்படுத்திய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய் பிரசாத் இளையராஜாவிற்கு சொந்தமான அறையை கள்ள சாவி போட்டு திறந்து உள்ளிருந்த விலையுயர்ந்த இசை கருவிகளை சேதப்படுத்தியும், இசை கருவிகளை திருடி கொண்டு போய் விற்றதாகவும், தனது ஸ்டுடியோவில் இருந்த இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading