இளையராஜாவுக்கு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது!

இளையராஜாவுக்கு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது!
இளையராஜா
  • Share this:
இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டுக்காகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ‘ஹரிவராசனம்’ என்ற விருதை கேரள அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை அடக்கியது.

கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஹரிவராசன் விருது, பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்ட நிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று கேரள அரசின் முதன்மைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் தெரிவித்திருந்தார்.


அதன்படி அவருக்கு சபரிமலை சன்னிதானத்தில் வைத்து ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. அதேநிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த விருதை கே.ஜே.யேசுதாஸ், ஜயன், பி.ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், கே.எஸ் சித்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காரியக்காரருக்கு மத்தியில்... சுயமரியாதைக்காரனே தி.மு.ககாரன்! ரஜினிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்