ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு'' - கோல்டன் குளோப் வென்ற கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

''எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு'' - கோல்டன் குளோப் வென்ற கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

எம்.எம்.கீரவாணி - இளையராஜா

எம்.எம்.கீரவாணி - இளையராஜா

இளையராஜாவின் ஸ்டுடியோவின் முன் எடுத்துக்கொண்ட செல்ஃபியையும் பகிர்ந்த கீரவாணி, இது தனக்கு கிடைத்த பரிசு என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்கார் 2023 விருதுக்காக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக இரண்டு பரிந்துரைகளைப் பெற்றிருந்தது. இந் நிலையில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. விருதினை படத்தின் இடையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார்.

முன்னதாக இந்திய சார்பாக ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஜெய்ஹோ பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதினை பெற்றிருந்தார். கோல்டன் குளோப் வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதே பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், இது அசாத்தியமானது என எம்.எம்.கீரவாணியை வாழ்த்தினார்.

இதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,எம்.எம்.கீரவாணி, ராஜமௌலி ஆகியோரின் கடின உழைப்புக்கு இந்த வெற்றி முழு தகுதியானது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு இளையராஜாவின் ஸ்டுடியோவின் முன் எடுத்துக்கொண்ட செல்ஃபியையும் பகிர்ந்த கீரவாணி, இது தனக்கு கிடைத்த பரிசு என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த ஆண்டு பாஃப்டா விருதுப் போட்டிக்கான முதற்கட்ட பரிந்துரைப் பட்டியலில், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருதுகள் கருதப்படுகின்றன. பாஃப்டாவிலும் ஆர்ஆர்ஆரர் படத்துக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

First published:

Tags: Ilaiyaraja, Rajamouli