முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிமாறன் முக்கியமான இயக்குநர் - 1500 படங்களுக்கு இசையமைத்த பின் கூறுகிறேன் - புகழ்ந்து பேசிய இளையராஜா

வெற்றிமாறன் முக்கியமான இயக்குநர் - 1500 படங்களுக்கு இசையமைத்த பின் கூறுகிறேன் - புகழ்ந்து பேசிய இளையராஜா

வெற்றிமாறன் - இளையராஜா

வெற்றிமாறன் - இளையராஜா

அது போல் வெற்றிமாறன் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு திரைக்கதை அமைப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து உன்னோடு நடந்தா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, வெற்றிமாறனை மிகவும் புகழ்ந்துள்ளார்.

இளையராஜா பேசியதாவது, திரையுலகுக்கு முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன். இதை நான் 1500 படங்களுக்கு இசையமைத்த பின் கூறுகிறேன். கடலில் ஒவ்வொரு அலையும் தனித்தனியாக வந்து கொண்டுதான் இருக்கும்.

அது போல் வெற்றிமாறன் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு திரைக்கதை அமைப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இதுவரை நீங்கள் கேட்டிராத இசையை இந்தப் படத்தில் கேட்பீர்கள் என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Director vetrimaran, Ilaiyaraja