இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் மரணம்

கற்க கசடற படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றிய இவர் தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார்.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் மரணம்
ஹோமோ ஜோ | இளையராஜா
  • Share this:
இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குநருமான ஹோமோ ஜோ உடல் நலக்குறைவால் காலமானார்.

இளையராஜா எனும் இசைமேதை உருவாக அவரது அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பெரும் பங்கு உண்டு. அவரது இளைய மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உடன் இணைந்து கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் உட்பட பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கற்க கசடற படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றிய இவர் தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார். இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.


மேலும் படிக்க: எழுத்தாலும் பேச்சாலும் தமிழைச் செதுக்கிய கலைஞர்… இசையாலும் குரலாலும் தமிழை உயர்த்திய இளையராஜா
 கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாவலர் மைந்தன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள் பலரும் ஹோமோ ஜோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading