தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து ஒன்றை கொடுக்க முடிவெடுத்துள்ளாராம் இசைஞானி இளையராஜா.
பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இளையராஜா. குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள். மூத்தவர் பாவலர் வரதராஜன். ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம் தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன் பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர், அடுத்து இளையராஜா, கடைசியாக கங்கை அமரன்.
ஜூன் 3-ம் தேதி பிறந்த இளையராஜா, அதே நாளில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியும் பிறந்தநாளைக் கொண்டாடுவதால், ஒவ்வொரு வருடமும் ஜூன் 2-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதன்படி வரும் ஜூன் 2-ம் தேதி தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இளையராஜா.
உனக்காகத்தான் இவ்வளவு நாள் வேண்டினேன்... கர்ப்பத்தை அறிவித்த நமீதா!
அதன்படி, கோவையில் இசைக்கச்சேரி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். அதில் இதுவரை மேடையில் பாடாத பாடல்களை பாட முடிவு செய்திருக்கிறாராம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.