கொரோனா களவீரர்களுக்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் உருவான ‘பாரத பூமி’ பாடல்

கொரோனா பரவிவரும் நிலையில் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விதமாக இளையராஜா எழுதி இசையமைத்துள்ள பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா பரவிவரும் நிலையில் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விதமாக இளையராஜா எழுதி இசையமைத்துள்ள பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் சேவையைப் பலரும் போற்றி பாராட்டி வரும் நிலையில் இளையராஜா பாரத பூமி என்ற பாடலை எழுதி இசையமைத்து பாரத பூமி என்ற பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலை தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். மேலும் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாரத பூமி பாடலைப் பாடியுள்ளார்.


இளையராஜாவின் மேற்பார்வையில் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட இசைக்கருவிளை லிடியன் இசைத்துள்ளார். இந்தப் பாடல் இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.மேலும் படிக்க: சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி வேண்டும் - முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்பார்க்க: காந்தக் கண்ணழகி... அனு இம்மானுவேலின் அசத்தல் ஆல்பம்...!


 
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading