ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இளையராஜாவை சந்தித்து வாழ்த்துபெற்ற ரஷ்ய கலைஞர்கள்

இளையராஜாவை சந்தித்து வாழ்த்துபெற்ற ரஷ்ய கலைஞர்கள்

இளையராஜா

இளையராஜா

இந்திய ரஷ்யா உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய ரஷ்ய வர்தக சபை சார்பில் ரஷ்ய கலைத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இசையமைப்பாளர் இளையராஜா கோலோச்சிக் கொண்டிருக்கிறார். தற்போதும் தமிழில் விஜய் ஆண்டனியின் தமிழரசன், விஷாலின் துப்பறிவாளன் 2, வெற்றிமாறனின் விடுதலை, தெலுங்கில் கிருஷ்ண வம்சியின் ரங்க மார்த்தாண்டா, மரீசிகா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துவரும் கஸ்டடி படத்துக்கு தனது மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்திய ரஷ்யா உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய ரஷ்ய வர்தக சபை சார்பில் ரஷ்ய கலைத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் பங்கேற்க ரஷ்யாவிலிருந்து 15 ரஷ்ய நடனக்கலைஞர்கள் இந்தியா வந்துள்ளனர் வருகின்ற 29ஆம் தேதி வரை சென்னை கோவை தஞ்சை ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிகளை ரஷ்ய கலைஞர்கள் நிகழ்த்த உள்ளனர். ரஷ்யாவின் பிரபல நடனமான பாலே, அக்ரோபட்டிங், ஜிம்னாஸ்டிக், ரஷ்யன் இசை உள்ளிட்ட 19 வகையான கலைகளை நிகழ்த்த உள்ளனர்.

இன்று முதல் கலை நிகழ்ச்சிகளைத் தொடங்க உள்ளனர். இதனை முன்னிட்டு சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து ரஷ்ய கலைஞர்கள் வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்யாவின் நடனத்தை ஆடினர். இவர்களை இசைஞானி இளையராஜா கைதட்டி உற்சாகபடுத்தியதுடன், அவர்களின் நடனங்களை தனது செல்போனில் படம்பிடித்து மகிழ்ந்தார், இதனைதொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த இளையராஜா ரஷ்ய கலைஞர்களை வரவேற்பதாக தெரிவித்தார்.

First published:

Tags: Ilaiyaraja