50-வது சர்வதேச திரைப்பட விழா: ரஜினிக்கு விருது வழங்குகிறார் அமிதாப் பக்சன்

50-வது சர்வதேச திரைப்பட விழா: ரஜினிக்கு விருது வழங்குகிறார் அமிதாப் பக்சன்
  • News18 Tamil
  • Last Updated: November 20, 2019, 10:00 AM IST
  • Share this:
கோவாவில் இன்று தொடங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் திரைத்துறை சார்பில் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

76 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில், முதலாவதாக இத்தாலியில் தயாரிக்கப்பட்ட டிஸ்பைட் தி போக் என்ற படம் திரையிடப்பட உள்ளது.


ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ்படங்களும் இடம்பெற உள்ளன. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவில் நீண்ட காலம் சேவையாற்றியதற்காக ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி என்ற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதினை நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துக்கு வழங்க உள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது பிரான்ஸ் நட்சத்திர நடிகை இஸ்பெல்லா ஹப்பர்ட்டிற்கு வழங்கப்பட உள்ளது.
First published: November 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading