• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Amazon, Netflix, Sonyliv, Hotstar ல் தல அஜித்தின் மெகா ஹிட் படங்கள்!

Amazon, Netflix, Sonyliv, Hotstar ல் தல அஜித்தின் மெகா ஹிட் படங்கள்!

அஜித்

அஜித்

விவேகம் ஒரு ரகசிய நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இன்டர்போல் அதிகாரியின் கதை. இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித்குமார்.

  • Share this:
தென்னிந்திய திரையுலகில் "தல" என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித், சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதை மூன்று முறை வென்றுள்ளார். இவர் திரையுலகில் எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் திரைப்பட துறையை தாண்டி இவர் ஏரோ டெக்னாலஜியில் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும், சிறந்த பைக் ரேசர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவரது படம் ரிலீஸ் ஆனால் போதும் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

இவரது கடைசி படம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது. இதையடுத்து இவர் வலிமை படத்தில் நடத்தி வருகிறார். ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சூழ்நிலையில் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் பலர் OTT தளங்களில் தங்களது படத்தை வெளியிட்டு வருகின்றனர். மேலும், ஏற்கனவே ரிலீசான படங்கள் பல Ott தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், OTT தளத்தில் வெளியான நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்கள் குறித்து பின்வருமாறு காண்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. விவேகம் (2017) - ஹாட்ஸ்டார் (hotstar)

விவேகம் ஒரு ரகசிய நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இன்டர்போல் அதிகாரியின் கதை. இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித்குமார். கதையின்படி அஜித் தனது நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு சதி வலைக்குள் சிக்கி கொள்வார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அவர்களுக்கு எதிராக பழிவாங்கத் தொடங்குவார். இந்த ஆக்‌ஷன் த்ரில்லரில் கதையில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார்.2. பில்லா (2007) : நெட்பிளிக்ஸ் (Netflix)

அஜித்குமார் நடித்த மாபெரும் வெற்றி படம் தான் பில்லா. இதில் அவரது ஸ்டைல் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். இந்த அதிரடி த்ரில்லர் படத்தில், அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஒரு அண்டர்கிரௌண்ட் உலக டானாக வரும் அஜித் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.Also read... Santhanam: சன்டிவி சீரியலில் ’சந்தானம்’ - சுவாரஸ்யமான தகவல்!

3. விஸ்வாசம் (2019) : அமேசான் பிரைம் (Amazon Prime)

சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஒரு கிராமத்து ரவுடியை பற்றியது. அவர் தனது பூர்வீகத்தில் தகராறுகளைத் அடிக்கடி செய்பவராக இருப்பார். இதனால் பிரிந்து செல்லும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பல வருடங்களுக்குப் பிறகு எவ்வாறு இணைகிறார் என்பது தான் கதை. இந்த அதிரடி படம் இந்த 2019ம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக மாறியது.4. என்னை அறிந்தால் (2015): ஹாட்ஸ்டார் மற்றும் சோனிலைவ் (Sony LIV)

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த படத்தில் போலீசாக அஜித் நடித்திருப்பார். கடத்தல் மோசடியைத் தடுக்க முயற்சிக்கும் உண்மையுள்ள காவல்துறை அதிகாரியான சத்தியதேவ் காதாபாத்திரம் தான் அது. ஆனால் சட்டவிரோத வர்த்தகத்தை மேற்கொண்ட வில்லன்தான் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு தனது காதலியைக் கொன்றான் என்பது இறுதியில் தான் தெரியவரும். இதையடுத்து, தனது மகளையும் கடத்தல் சம்பவத்தில் பலியாக இருந்த கதாநாயகியையும் எப்படி காப்பாற்றுவார் என்பதே கதை.5. அமர்கலம் (1999) : ஹாட்ஸ்டார்

காதல் கலந்த இந்த அதிரடி படத்தில் ஒரு திரையரங்கில் வசிக்கும் ரவுடியாக அஜித் நடித்திருப்பார். அவர் தனது குழந்தை பருவத்தில் பல்வேறு சிதரவைதைகளை அனுபவித்தால் எந்த ஒரு பயமும் இல்லாத யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அதுவே தனக்கு பிடித்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவை அனைத்தும் மாறிவிடும். இறுதியில் காதலியின் கரம் பிடிக்கிறாரா என்பது தான் கதை.6. மங்கத்தா (2011) : சோனிலைவ்

இந்த நகைச்சுவை கலந்த அதிரடி-த்ரில்லர் மும்பையில் மாநகரில் படமாக்கப்பட்டது. கிரிக்கெட் பந்தயத்தை வைத்து நடத்தப்படும் சூதாட்ட பணத்தைச் சுற்றி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வேலைகளை செய்து வரும் 4 பேர் முதலில் இந்த பணத்தை திருட திட்டம் தீட்டுவர். பின்னர் எப்படியோ ஒரு வழியில் அஜித்துடன் கூட்டு சேருவர். இறுதியில் பல ட்விஸ்டுகள் இந்த கதையில் கொடுக்கப்பட்டிருக்கும். சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கும் இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.7. வரலாறு (2006) : சோனிலைவ்

ஹிஸ்டரி ஆஃப் காட்பாதர் என்ற ஒரு அதிரடி குடும்ப பாங்கான திரைப்படம் தான் இது. இதில் அஜீத் குமார் மூன்று வேடத்தில் நடித்துள்ளார். சக்கர நாற்காலி முடங்கியிருக்கும் பணக்கார தந்தையாகவும் மற்றும் இரு மகன்கள் வேடத்திலும் நடித்துள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: