கதைக்கு தேவைப்பட்டால் ஆடையின்றி நடிக்க நானும் தயார் - பிந்துமாதவி

"அமலாபாலின் தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்"

news18
Updated: July 29, 2019, 1:35 PM IST
கதைக்கு தேவைப்பட்டால் ஆடையின்றி நடிக்க நானும் தயார் - பிந்துமாதவி
பிந்து மாதவி | அமலா பால்
news18
Updated: July 29, 2019, 1:35 PM IST
கதைக்கு தேவைப்பட்டால் அமலாபால் எடுத்த துணிச்சலான முடிவை நானும் எடுப்பேன் என்று நடிகை பிந்துமாதவி கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு தெலுங்கில் நடிகையாக அறிமுகமான நடிகை பிந்துமாதவி, தமிழில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகையாகவும் மாறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது கழுகு 2 படத்தில் நடித்துள்ளார் பிந்துமாதவி. சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் காளிவெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு.


அந்தவகையில் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நடிகை பிந்துமாதவி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் நடிகை பிந்துமாதவி கூறியிருப்பதாவது, “பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆடை படம் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆடை படத்தின் கதையும், அமலாபால் நடிப்பு குறித்தும் எனது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். வழக்கமான கதையாக வெகுளி பெண்ணாக அமலாபால் கதாபாத்திரத்தை காண்பிக்காமல், துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக அவரை காண்பித்து, சுவாரஸ்யமாக கதை அமைத்திருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அமலாபாலின் தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

உங்களுக்கு வரும் கதைகளுக்கு தேவைப்பட்டால் அப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுக்க நீங்கள் தயாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிந்துமாதவி, “கதைக்கு தேவைப்பட்டால் நான் நடிக்க தயார். நல்ல கதை அமைந்தால் அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Loading...

வீடியோ பார்க்க: டிக்டாக் குற்றங்களின் கதை!

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...