பேய்களை ஓட்டும் சிவா, நிக்கி கல்ராணி - இடியட் ட்ரைலர் தேதி அறிவிப்பு!

பேய்களை ஓட்டும் சிவா, நிக்கி கல்ராணி - இடியட் ட்ரைலர் தேதி அறிவிப்பு!

இடியட் திரைப்படம்

இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இடியட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 25-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இடியட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 25-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  லொள்ளு சபா ராம்பாலா சந்தானத்தின் ’தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநரானார். ஹீரோவாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தானத்துக்கு முதல் வெற்றிப்படமாக தில்லுக்கு துட்டு அமைந்தது. போலி பேய்களுக்கு மத்தியில் நிஜப்பேய்கள் செய்த அட்டகாசமும், பேய்களையே மிரட்டிய சந்தானத்தின் காமெடியும் தில்லுக்கு துட்டில் ரசிகர்களை சிரிக்க வைத்தது. ஏறக்குறைய அதே ஃபார்முலாவில் இடியட் படமும் தயாராகியிருக்கிறது.

  இடியட்டில் மிர்ச்சி சிவாவும், நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். 2020 அக்டோபர் 24-ம் தேதி இடியட்டின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அதில் இவர்கள் இருவரும் ஒரு பேயை கட்டி தூக்கிச் செல்வது போல் புகைப்படம் வெளியிட்டிருந்தனர். நேற்று வெளியிட்ட விளம்பரத்தில் சிம்மாசனத்தில் சிவாவும், நிக்கி கல்ராணியும் அமர்ந்திருக்க, இரு பேய்கள் கவரி வீசுகின்றன. இந்தப் புகைப்படங்களிலிருந்து இதுவொரு பேய் ஸ்பூஃப் திரைப்படம் என்பது உறுதியாகிறது.

  ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் இடியட்டை தயாரித்துள்ளது. படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: