• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara: ’இதுவும் கடந்து போகும்’ பாடல் - ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற நயன்தாரா!

Nayanthara: ’இதுவும் கடந்து போகும்’ பாடல் - ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

2011-ல் தென்கொரியாவில் வெளியான Blind திரைப்படத்தை தழுவி நெற்றிக்கண் படம் எடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் பாடல் வெளியானதை முன்னிட்டு நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

    முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாராவுக்கு ரசிகர்கள் உள்ளனர். அவரது நாயகி மையப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளவர் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இதில் நெற்றிக்கண் நாயகி மையப்படம். இதில் நயன்தாரா கண் பார்வையற்றவராக வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2011-ல் தென்கொரியாவில் வெளியான Blind திரைப்படத்தை தழுவி நெற்றிக்கண் படம் எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் பார்வையை இழக்கும் பெண் போலீஸ் அதிகாரி எப்படி ஒரு சைக்கோ கொலைகாரனை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை. அதனை நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராய் இயக்க, விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

    இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, இதுவும் கடந்து போகும் எனத் தொடங்கும் பாடலை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடல் வெளியானதைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேகை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: