ஹோம் /நியூஸ் /entertainment /

''ஹீரோ மாதிரி முகமில்லை... இயக்குநர் ஆகப்போறேன்..'' கோயில் வாசலில் யோகிபாபு சொன்ன எதிர்கால ப்ளான்!

''ஹீரோ மாதிரி முகமில்லை... இயக்குநர் ஆகப்போறேன்..'' கோயில் வாசலில் யோகிபாபு சொன்ன எதிர்கால ப்ளான்!

யோகிபாபு

யோகிபாபு

comedy actor Yogi Babu | தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்க உள்ளேன் என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காமெடி நடிகர்களான யோகிபாபு, சின்ன ஜெயந்தி உள்ளிட்ட 4 காமெடி நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  பின்பு செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு தெரிவித்ததாவது. “வடிவேலு நல்ல நடிகர். நான் அவருடைய தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன். கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன். நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடிக்கிறேன்.

  அவர் நல்ல நடிகர். அதற்கு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கதை வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் இயக்குவேன். நடிகர் விவேக், அப்துல் கலாம் உட்பட பலரிடம் பயணம் செய்துள்ளார்.

  இதையும் படிங்க : ''தங்கச்சிக்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்'' - திருமண விழாவில் உருக்கமாய் பேசிய விஷால்!

  நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர் அப்துல் கலாம் போன்றவருடன் பயணம் செய்தவர். நான் இயக்குனர் சொல்வதை தான் நடித்து வருகிறேன். நான் ஒத்துக் கொள்கிறேன் கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன். ஆனால் மண்டேலா போல படங்கள் கதாநாயகன்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல.

  அதனால் நான் இது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன். காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான். அது மக்களுக்கு நன்றாக தெரியும்” என அவர் தெரிவித்தார்.

  செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

  Published by:Karthi K
  First published:

  Tags: Actor Yogibabu, Cinema