ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிலீஸ் செய்த ‘அண்ணாத்த’ படத்தை இன்னும் பார்க்கவில்லை…’ – வசூலை விமர்சித்து உதயநிதி ஓபன் டாக்…

ரிலீஸ் செய்த ‘அண்ணாத்த’ படத்தை இன்னும் பார்க்கவில்லை…’ – வசூலை விமர்சித்து உதயநிதி ஓபன் டாக்…

அண்ணாத்த படத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ் - உதயநிதி

அண்ணாத்த படத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ் - உதயநிதி

அண்ணாத்த படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அண்ணாத்த படத்தின் வசூல் குறித்து கேட்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தான் ரிலீஸ் செய்த அண்ணாத்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று உதயநிதி ஓப்பனாக பேசியுள்ளார். அவரது பேட்டி ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் தன்மையுடன் உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறார். இவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கோலிவுட்டில் விக்ரம், பீஸ்ட் உள்ளிட்ட முக்கிய படங்களை வெளியிட்டுள்ளது.

  அடுத்ததாக அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தையும் ரெட் ஜெயன்ட் கைப்பற்றி, தியேட்டர்களை புக்கிங் செய்துவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களை ரெட்ஜெயன்ட் வெளியிடும்.

  அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்தது. இந்த படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  வீரம், வேதாளம்,விவேகம் படங்களை இயக்கிய சிவா அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஐ.எம்.டி.பியில் இந்த படம் 10-க்கு 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

  Nayanthara: தன்னிறைவு அடைந்து விட்டேன்... மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் ரொமாண்டிக் வாழ்த்து!

  இந்த நிலையில், படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அண்ணாத்த படத்தின் வசூல் குறித்து கேட்கப்பட்டது.

  அப்போது, கையில் அழுகை (Crying) எமோஜி குறிப்பிடப்பட்ட அட்டையை எடுத்துக் காட்டிய உதயநிதி, ‘வசூல் ரீதியாக அண்ணாத்த இன்னும் பெட்டராக வந்திருக்க வேண்டிய படம். படத்தை இன்னும் பெட்டரா எடுத்து இருந்திருக்கலாம்.’ என்று கூறினார்.

  ராகுல் காந்தி பேரணியில் பங்கேற்ற பிரபல நடிகை… காங்கிரஸில் இணையப் போவதாக தகவல்…

  இத்துடன் நிற்காமல், ‘நான் இன்னும் அண்ணாத்த படத்தை பார்க்கவில்லை’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உதயநிதியின் இந்த பேட்டி அடங்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Rajinikanth, Udhayanidhi Stalin