ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''ஒரு வித பயத்துடன் கார்த்தி வந்தார்'' – ஷூட்டிங் அனுபவத்தை விவரித்த இயக்குநர் பாண்டிராஜ்

''ஒரு வித பயத்துடன் கார்த்தி வந்தார்'' – ஷூட்டிங் அனுபவத்தை விவரித்த இயக்குநர் பாண்டிராஜ்

கார்த்தி - பாண்டிராஜ்

கார்த்தி - பாண்டிராஜ்

சிலர் கார்த்தியிடம் என்னைப் பற்றி தவறாக சொல்லி ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால், அவர் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ அது படப்பிடிப்பு தளத்தில் நடக்கவே இல்லை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் கார்த்தியுடன் எத்தனை படங்களை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று இயக்குனர் பாண்டிராஜ் அவரை பாராட்டி பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியதாவது-

  கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பின்போது கார்த்தி சார் ஒரு பயத்துடன் தான் என்னிடம் வந்தார். ஆனால் என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல், ஹீரோவை பார்த்து கொள்ளும் விதம், ஒரு நிமிடத்தை கூட வீணடிக்காத உழைப்பு ஆகியவை கார்த்தி சாரை மிகவும் கவர்ந்தன.

  மாலை 6 மணிக்கு பேக் அப் செய்ய வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் கிரேஸ் டைம் கிடைக்கும். அதைக்கூட நான் வீணடிக்காமல் இரண்டு காட்சிகளை படமாக்கி விடுவேன். இதையெல்லாம் அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

  ஹீரோ இல்ல.. இயக்குநர் இருக்காரு! துணிவு பட ஷூட்டிங்கில் வினோத்! ட்ரெண்டாக்கும் ஃபேன்ஸ்!

  ஷூட்டிங் நடைபெற்ற பத்தாவது நாளில், ‘சார் நாம இன்னொரு படம் பண்றோம் சார். நான் எந்த இயக்குனருடனும் இரண்டாவது முறை படம் பண்ணியது இல்லை ஆனால் உங்களுடன் பண்ணவேண்டும்’ சார் என்றார். நான் அவரிடம் ‘இப்போதான சார் படத்தை ஆரம்பித்திருக்கிறோம். முடியும்போது முடிவெடுப்போம் சார்’ என்றேன் ஆனால் அவர் ‘பண்றோம் சார்’ என்று உறுதியாக இருந்தார்.

  நான் அவரிடம் ‘படம் முடியும் போது இதே நெருக்கத்தில் நாம் இருக்கிறோமா என்று பார்க்கலாம்’ என்றேன். ஆனால் படப்பிடிப்பின் போது எந்த இடத்திலும் எனக்கும் அவருக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை.

  சிலர் அவரிடம் என்னைப் பற்றி தவறாக சொல்லி ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால், அவர் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ அது படப்பிடிப்பு தளத்தில் நடக்கவே இல்லை. எனக்குமே கார்த்தியுடன் எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணலாம் என்ற அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.

  தனுஷ் – சிம்பு இணைந்து நடிக்கும் படம்?! புதிய தகவலால் பரபரப்பான கோலிவுட்!

  ஏனென்றால் அவர் இயக்குனரின் ஆக்டர். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை உள்வாங்கிக் கொண்டு நடிப்பார். அவர் உதவி இயக்குனராகவும் இருந்தவர். அதனால் புரிதல் அவரிடம் அதிகம் இருக்கும்.

  ஆனால் அவர் சொன்னது போல், நானும் அவரும் அடுத்த படம் பண்ணவில்லை. கொஞ்சம் தாமதம் ஆன நிலையில், அவர் விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்டாகி விட்டார்.

  இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Karthi, Kollywood