ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘முதலில் துணிவு படத்தை தான் பார்ப்பேன்… அடுத்துதான் வாரிசு’ – வைரலாகும் நாஞ்சில் சம்பத் வீடியோ…

‘முதலில் துணிவு படத்தை தான் பார்ப்பேன்… அடுத்துதான் வாரிசு’ – வைரலாகும் நாஞ்சில் சம்பத் வீடியோ…

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் – விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகுவதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பொங்கலுக்கு ரிலீஸாகும் வாரிசு, துணிவு படங்களில் முதலில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பேச்சாளரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.

    அஜித்தில் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகுவதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

    இந்திய அளவில் கவனம் பெறும் கன்னட சினிமா… தவறவிடக் கூடாத டாப் 10 படங்கள்…

    ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

    துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் 3 ஆவது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. துணிவு படத்திலிருந்து 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    "ரஞ்சிதமே பாடலுக்கு தியேட்டர் சீட்ல யாரும் உட்கார மாட்டீங்க"- இசையமைப்பாளர் எஸ்.தமன்

    இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரபல பேச்சாளரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத்திடம், பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு துணிவு படத்தை தான் முதலில் பார்ப்பேன். நான் துணிவை விரும்புகிறேன். அதனால் பார்ப்பேன் என்று பதில் அளித்துள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood