Home /News /entertainment /

சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்… நடிகர் கார்த்தி ட்வீட்

சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்… நடிகர் கார்த்தி ட்வீட்

சாண்டி மாஸ்டர் - கார்த்தி

சாண்டி மாஸ்டர் - கார்த்தி

Karthi on sandy master : யுவன் சங்கர் ராஜா இசையில் கஞ்சாப்பூ கண்ணால, மதுரை வீரன் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதில் வானம் கிடுகிடுங்க என்ற பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனத்தை வடிவமைத்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ளது. சாண்டி மாஸ்டர் மீது கார்த்திக்கு என்ன கோபம் என்பது தெரியவந்துள்ளது.

    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வெள்ளியன்று வெளியான இந்த திரைப்படம் திங்கட் கிழமை விடுமுறை நாள் வரை வசூலைக் குவித்து, லாபத்தை ஈட்டியுள்ளது.

    கார்த்தி நடித்த படங்களிலேயே நல்ல ஓபனிங்கை விருமன் படம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியுடன், அதிதி, சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தன.

    சூர்யாவின் பட நாயகி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்…

    யுவன் சங்கர் ராஜா இசையில் கஞ்சாப்பூ கண்ணால, மதுரை வீரன் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதில் வானம் கிடுகிடுங்க என்ற பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனத்தை வடிவமைத்திருந்தார்.

    பெண்களை பாடி ஷேமிங் செய்பவர்களுக்கு பாடம் எடுக்க போகும் ரஜினி பட நாயகி!

    இந்த பாடலின் ஒரு காட்சியில் கார்த்தி பல்டி (SomerSault Rolling) செய்திருப்பார். இந்த பாடல் அதிகாலை 2-3 மணிக்கு படமாக்கப்பட்டது. இந்த நடு ராத்திரியில் கார்த்தியை பாடாய் படுத்தியதால் சாண்டி மாஸ்டர் மீது செல்லமான கோபத்தில் கார்த்தி உள்ளார். இதனை பாடல் வெளியீட்டின்போதே கார்த்தி வெளிப்படுத்தியிருந்தார்.



    இந்நிலையில் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர் மன்னிக்கவேமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.



    நடிகர் கார்த்தியின் இந்த கிண்டல் பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பாராட்டியுள்ள கார்த்தி, இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi, Dance master sandy

    அடுத்த செய்தி