ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘பிற்போக்குத்தனமான படங்களில் நடிக்க மாட்டேன்’ - நடிகர் ஆயுஷ்மான் குரானா

‘பிற்போக்குத்தனமான படங்களில் நடிக்க மாட்டேன்’ - நடிகர் ஆயுஷ்மான் குரானா

டாக்டர் ஜி படத்தின் போஸ்டர்

டாக்டர் ஜி படத்தின் போஸ்டர்

‘’பிற்போக்குத்தனங்கள் மிகவும் பிரபலமான விஷயமாக இருக்கிறது. ஆனால் அதற்காக என்னுடைய மனநிலையை, நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது.’’

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ‘பிற்போக்குத்தனமான படங்களில் நடிக்கவே மாட்டேன்’ என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார்.

  இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஆயுஷ்மான் குரானா. இவர் அதிக படங்களில் நடிக்காமல் வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களை தேர்வு செய்து, நடித்து வருகிறார்.

  தற்போது இவரது நடிப்பில் ‘டாக்டர் ஜி’ என்ற படம் வெளிவந்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

  டாக்டர் உதய் குப்தா என்ற கேரக்டரில் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார்.

  தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத விஷயங்கள் சர்தார் படத்தில் உள்ளன… ஹீரோயின் ராஷி கன்னா பேட்டி

  இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் கஷ்யபின் சகோதரி அனுபுதி கஷ்யப்,. டாக்டர் ஜி படத்தை இயக்கியுள்ளார் இது அவருக்கு முதல் படம் ஆகும். இந்த நிலையில் டாக்டர் ஜி படம் குறித்து ஆயுஷ்மான் குரானா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

  ஒழுக்கத்தை முன்னிறுத்தும் படங்கள், முற்போக்கான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு எனக்கு மிகவும் விருப்பம். அந்த வகையில் டாக்டர் ஜி திரைப்படம் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இந்த படத்தை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

  அழகில் அசத்துறியே ஜாஸ்மின்னு... ரம்யா பாண்டியன் அசத்தல் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்

  முற்போக்கான படங்கள் இயல்பாகவே நல்ல வசூலை வாரிக் குவிக்கும். தப்பித் தவறிக்கூட பிற்போக்குத்தனமான படங்களில் நான் நடிக்க மாட்டேன். பிற்போக்குத்தனங்கள் மிகவும் பிரபலமான விஷயமாக இருக்கிறது. ஆனால் அதற்காக என்னுடைய மனநிலையை, நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது.

  இவ்வாறு ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிற்போக்குத்தனமான படங்கள் என்று ஆயுஷ்மான் குரானா எதைக் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் சோஷியல் மீடியாவில் எழத் தொடங்கியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Bollywood