• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: 'உங்கள் அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்’ - விவேக் குறித்து நயன்தாரா

Actor Vivek: 'உங்கள் அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்’ - விவேக் குறித்து நயன்தாரா

விவேக் - நயன்தாரா

விவேக் - நயன்தாரா

விஸ்வாசம் படத்தின் அற்புத நினைவுகள் எப்போதும் தன்னுடன் இருக்கும் என மறைந்த நடிகர் விவேக் குறித்து நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விஸ்வாசம் படத்தின் அற்புத நினைவுகள் எப்போதும் தன்னுடன் இருக்கும் என மறைந்த நடிகர் விவேக் குறித்து நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    Actor Vivek Passed Away - Nayanthara condolence

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

    இந்நிலையில் நடிகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பல ஆண்டுகளாக அவருடன் பணிபுரிந்த அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். குறிப்பாக 'விஸ்வாசம்' படத்தில். மிக விரைவாக நம்மை விட்டுச் சென்று விட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: