Home /News /entertainment /

‘மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகும் நடிப்பேன்’ - உதயநிதி ஸ்டாலின்

‘மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகும் நடிப்பேன்’ - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin : என்னுடைய தாத்தா சினிமா அரசியல் என இரண்டு துறையிலும் பயணித்தார். அதுபோல் நானும் பயணிப்பேன். – உதயநிதி

சமூகப் பொறுப்புள்ள கதைகள் அமைந்தால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகும் நடிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், ஆரி, நடிகை தான்யா ரவிச்சந்திரன், நடிகர்கள் இளவரசு, சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி மற்றும் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய படக்குழுவினர் பலரும், நெஞ்சுக்கு நீதி படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதேபோல் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், ‘’நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவர் தயாரிப்பில் நான் இயக்கிய கனா திரைப்படத்தின் வெற்றிதான் தனக்கு அடையாளத்தைக் கொடுத்தது.  அதன்மூலமே நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எனக்கு கிடைத்தது.

இதையும் படிங்க - கமலின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

நெஞ்சுக்கு நீதி  திரைப்படத்தைப் பார்த்து, நாம் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாமே என்று யாராவது, எங்காவது சின்னதாக யோசித்தால் அதுதான் எங்கள் குழுவினருக்கு கிடைத்த விருது.’’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘’மனசுக்கு நேர்மையாக உண்மையான உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்த்தோம். இந்தப் படம் பேசப்படுகிறது என்றால் அதற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்துவின் உழைப்புதான் காரணம். ‘’ என்றார்.

இதையும் படிங்க - ‘கனவு நிஜமானது...’ கமலுடன் நடித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சி!!

அப்போது மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு நீங்கள் தொடர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த உதயநிதி சமூகப் பொறுப்புள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். அது போன்ற படங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்னுடைய தாத்தா சினிமா அரசியல் என இரண்டு துறையிலும் பயணித்தார். அதுபோல் நானும் பயணிப்பேன் பயணித்து வருகிறேன் என கூறினார்.
Published by:Musthak
First published:

Tags: Udhayanidhi Stalin

அடுத்த செய்தி