நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - பாலிவுட் ஸ்டார் ரித்திக் ரோஷன்

நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - பாலிவுட் ஸ்டார் ரித்திக் ரோஷன்
ரித்திக் ரோஷன் - விஜய்
  • Share this:
நடிகர் விஜய் நடனமாடுவதற்கு முன் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்பதை தானும் கற்றுக்கொள்ள விரும்புவதாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இவருக்கு திரைத்துறையில் இருக்கும் நடிகர்களும் தீவிர ரசிகர்களாக உள்ளனர். நடிகர் விஜய்யை பலரும் ரசிப்பதற்கான காரணங்கள் ஏராளமிருந்தாலும், அதில் முதன்மைக் காரணமாக இருப்பது அவரது நடனம். நடனத்தில் தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றும் நடிகர் விஜய் அதில் இளம் வயதிலிருந்தே அதிக ஆர்வம் கொண்டவரும் கூட.

நடிகர் விஜய்க்கு நடனம் சொல்லித் தரும் டான்ஸ் மாஸ்டர்கள் தொடங்கி, அவருடன் ஆடும் நடிகைகள் என பெரும்பாலானோர் ஒரே டேக்கில் சிரமமான அசைவுகளையும் எளிதில் விஜய் முடித்து விடுவார் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனிடம் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த நடிகர் ரித்திக் ரோஷன், “அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனத்தின்போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: நாடகக் காதல் கதை தான் அடுத்த படம்... ‘அடங்காதே’ இயக்குநர் அதிரடி அறிவிப்பு!


First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading