மது அருந்துவதை நிறுத்தி ஒரு வருசமாச்சு: ரகசியம் உடைத்த சிம்பு!

சிம்பு

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் திரைவெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், திரைப்படம் குறித்து படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர்

  • Share this:
தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டுகாலம் ஆவதாக நடிகர் சிலம்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வெளியிட தயார் நிலையில் உள்ளது. ஆனால் திரையரங்குகள் மூடி கிடைப்பதால் அவை திறப்பதற்காக படக்குழு காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் இணைந்து: பேசிக்கொண்டனர். அப்போது பேசிய சிலம்பரசன் குடி பழக்கத்தை நிறுத்தி இன்றோடு சரியாக ஓராண்டு காலம் ஆவதாக கூறினார். பிரேம்ஜி  போன்றோர் உடன் இருந்தும்  கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

மாநாடு படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்புகள் இன் போது சிலம்பரசன் அதிக எடையோடு இருந்தார். அதன் பின்னர் கொரோனா முதல் அலையின் போது அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியானதால் படத்தில் சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டிய இருந்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறினார். நடிகர் சிம்புவின் புதிய பரிமாணத்தை இந்த திரைப்படத்தில் தான் கொண்டு வந்துள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளனர்.

மாநாடு திரைப்படத்தில் தாங்கள் கடினமாக பணியாற்றியதற்கு மக்களும் ரசிகர்களும் நல்ல மரியாதை கொடுப்பார்கள் என்ற சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மாநாடு திரைப்படம் வேற லெவலில் வந்திருப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
Published by:Murugesh M
First published: