• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’அவரின் அன்பில் என் தாயைப் பார்த்தேன்’ - அருண் விஜய் நெகிழ்ச்சி

’அவரின் அன்பில் என் தாயைப் பார்த்தேன்’ - அருண் விஜய் நெகிழ்ச்சி

ரோட்டோர கடைக்கார அம்மாவுடன் அருண் விஜய்

ரோட்டோர கடைக்கார அம்மாவுடன் அருண் விஜய்

"இந்த அம்மாவின் அன்பில் என் தாயைப் பார்த்தேன். இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது"

  • Share this:
    அருண் விஜய்க்கு படத்துக்கு படம் தமிழகத்தில் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் அன்னதானம் செய்தனர். இதனை 'பூஸ்ட் அப்' செய்வது போல், அருண் விஜய்யும் போகிற இடங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார். சமானியர்களுடன் சகஜமாக பழகுகிறார்.

    ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் வரும் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் நடந்து வருகிறது. அப்போது ரோட்டுக்கடையில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார் அருண் விஜய். அந்தக் கடையை நடத்திவரும் வயதான அம்மா, அருண் விஜய்யிடம் காட்டிய அன்பில் திக்குமுக்காடிப் போனவர், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், மீன் பொரிக்கவும் செய்துள்ளார். அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    "ரோட்டுக்கடையில் உணவருந்திய போது... இந்த அம்மாவின் அன்பில் என் தாயைப் பார்த்தேன். இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது" என அருண் விஜய் அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். உடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சினேகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: