• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mahendran: ’பிரகாஷ்ராஜ் உருவில் இயக்குநர் மகேந்திரனை பார்த்தேன்’ - மகன் நெகிழ்ச்சி!

Mahendran: ’பிரகாஷ்ராஜ் உருவில் இயக்குநர் மகேந்திரனை பார்த்தேன்’ - மகன் நெகிழ்ச்சி!

இயக்குநர் மகேந்திரனுடன் பிரகாஷ்ராஜ்

இயக்குநர் மகேந்திரனுடன் பிரகாஷ்ராஜ்

பிரகாஷ் ராஜ் வடிவில் இயக்குநர் மகேந்திரனை கண்டதாக அவரது மகன் ஜான் மகேந்திரன் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

  • Share this:
பிரகாஷ் ராஜ் வடிவில் இயக்குநர் மகேந்திரனை கண்டதாக அவரது மகன் ஜான் மகேந்திரன் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

1960-களின் மத்தியில் இருந்து பல படங்களுக்கு கதை எழுதிய இயக்குநர் மகேந்திரன், 1978-ல் வெளியான முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பிறகு அவர் இயக்கிய ஒவ்வொரு படமுமே, படைப்பாளிகளுக்கான படிப்பினையாகத் தான் இருந்தது. மகேந்திரன் இயக்கியது 12 படங்கள் தான், ஆனால் அதில் நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இளம் படைப்பாளிகளுக்கு மகேந்திரனின் படங்கள் பல்கலைக்கழக பாடம் என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



யதார்த்தமான கதைகளம், எளிய கதாபாத்திரங்கள், நெஞ்சில் பதியும் திரைமொழி என மகேந்திரனின் படைப்புகள் ஒவ்வொன்றும் மனதுக்கு நெருக்கமான வகையில் இருக்கும். இந்நிலையில் அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பதிவில், “ஆறு வருடங்களுக்கு முன் கேட்ட கதையை அவ்வுளவு உன்னிப்பாக ஞாபகம் வைத்து கூற முடியுமா? அப்பா சொன்ன கதையை இன்று பிரகாஷ்ராஜ் அவர்கள் கூறிய பொழுது, பிரகாஷ்ராஜ் சார் தெரியவில்லை, இயக்குனர் மகேந்திரன் கண் முன் தெரிந்தார். அருமையான குழந்தையை பிரசவிக்காமல் சுமப்பதாக உணர்வதாக கூறினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான் மகேந்திரன் விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: