Meena: ’படையப்பா, தேவர்மகன் வாய்ப்பை தவறவிட்டேன்’ - வருத்தப்படும் மீனா!

மீனா

மம்முட்டி, மோகன்லால் இருவருமே அவரை காதலிப்பார்கள். இந்த வேடம் முதலில் மீனாவுக்கு தான் வந்ததாம். சில காரணங்களால் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    மீனா நாயகியாக அறிமுகமாகி சமீபத்தில் 30 வருடங்கள் நிறைவு செய்தார். குழந்தை நட்சத்திரமாக அதற்கும் பத்து வருடங்கள் முன் சினிமாவுக்கு வந்தவர் அவர். அதன்படி மீனாவின் சினிமா பிரவேசம் நடந்து 40 வருடங்கள் முடிகிறது.

    தனது நீண்டநாள் சினிமா அனுபவத்தைக் குறித்து பகிர்நது கொண்ட மீனா, முக்கியமான சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், கால்ஷீட் மற்றும் பிற காரணங்களால் நடிக்க முடியாததை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் முக்கியமான படம் ஹரிகிருஷ்ணன்ஸ்.

    பாசில் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால், ஷாம்லி நடித்த இந்தப் படமே இவ்விரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நாயகனாக நடித்த கடைசிப்படம். இதன் பிறகு சில படங்களில் கௌரவ வேடத்தில் தோன்றியிருக்கிறார்கள். மலையாள நடிகர் சங்க நிதிக்காக எடுக்கப்பட்ட டுவென்டி 20 படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், அதில் திலீப், ஜெயராம், சுரேஷ் கோபி உள்பட மலையாளத்தின் 80 சதவீத நடிகர்கள் நடித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தில் ஜுஹி சாவ்லா நாயகி. மம்முட்டி, மோகன்லால் இருவருமே அவரை காதலிப்பார்கள். இந்த வேடம் முதலில் மீனாவுக்கு தான் வந்ததாம். சில காரணங்களால் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் படையப்பாவில் சௌந்தர்யா நடித்த வேடமும், தேவர்மகனில் ரேவதியின் வேடமும் மீனா நடிக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்சனையால் கைநழுவியிருக்கிறது. அதேபோல் வாலியிலும் மீனாவையே முதலில் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள்.

    முப்பது வருட நாயகி வாழ்க்கையில் பல முக்கிய படங்கள் கைநழுவிப் போனாலும், இந்த நான்கு படங்களில் நடிக்க முடியாமல் போனதில் மீனாவுக்கு வருத்தம். இனி ஒரேவித கதாபாத்திரங்களில் நடிக்காமல் நெகடிவ் கதாபாத்திரங்களிலும் நடிப்பது என மீனா முடிவெடுத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: