MK Stalin: ரஜினி, விஜய், அஜித் பிடிக்கும் - மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin: ரஜினி, விஜய், அஜித் பிடிக்கும் - மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

மாதிரிப்படம்

நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை தனக்குப் பிடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை தனக்குப் பிடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நாளை மறுதினம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளும் தங்களது மூத்த தலைவர்கள் இல்லாமல் முதன்முறையாக களம் காணுகின்றன. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அதிமுக-வும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக-வும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்றன. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது திமுக.

    இதற்கிடையே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதுமான பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் ‘ஸ்டாலின் செய்வாரா’ என்ற முன்னணி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் ஸ்டாலின். அதில் அரசியல் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் என இளைஞர்கள் கேட்ட பலவற்றிற்கு பதிலளித்தார்.

    அப்போது ஸ்டாலினிடம் சினிமா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தரமான படங்களை நிச்சயம் பார்ப்பேன். ஸ்டைல் நடிகர் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். இளைஞர்களைக் கவரக் கூடிய வகையில் நடிப்பதால் விஜய்யை பிடிக்கும். நவரசம் கலந்த நடிப்பால் அஜித்தைப் பிடிக்கும்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: