அஜித்துக்கு மாஸான கதை ரெடி... சீக்ரெட்டை உடைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

அஜித்துக்காக நல்ல மாஸான ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.

news18
Updated: December 5, 2018, 4:24 PM IST
அஜித்துக்கு மாஸான கதை ரெடி... சீக்ரெட்டை உடைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸ்
news18
Updated: December 5, 2018, 4:24 PM IST
அஜித்துக்காக நல்ல மாஸான ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி படத்துக்கு எதிராக சர்ச்சைகளும் எழுந்தன.

சர்கார் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் யாருடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லியதாகவும், விரைவில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் அவர் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், “கத்தி, துப்பாக்கி இரண்டு படங்களுமே அதன் இரண்டாம் பாகத்தை கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கும். துப்பாக்கி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது. அந்த படத்தின் கதையை மிஞ்சும் அளவிற்கு கதை அமைந்தால் துப்பாக்கி படம் 2-வது பாகம் இயக்குவேன்.

ரஜினிகாந்தை சந்திப்பது என்பதே முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்த சந்தோஷத்தை போன்றது. அவரை சந்தித்து கதை கூறியிருக்கிறேன். கதை பிடித்திருப்பதாக சொன்னார். அழைப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசியல் படமாக இருக்க வாய்ப்பில்லை கற்பனைக் கதையாக இருக்கும்.

என்னைப் பார்க்கும் ரசிகர்கள் அஜித்துடன் எப்போது பணியாற்றுவீர்கள் என்றுதான் அதிகம் கேட்கிறார்கள். தீனா படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி. ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அஜித்திடமே சொல்லிவிட்டேன். ரசிகர்களின் சந்தோஷத்திற்காகவே நல்ல ஒரு மாஸான படம் பண்ண வேண்டும் என்பதற்காக நல்ல ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன். அஜித் அழைப்புக்காக காத்திருக்கிறேன். அவர் அழைத்தால் உடனே ஆரம்பித்துவிடலாம்” என்று கூறியுள்ளார்.

காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ
Loading...
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...