அஜித் இல்லாமல் ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றியிருக்க முடியாது - போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் இல்லாமல் ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றியிருக்க முடியாது - போனி கபூர்
ஸ்ரீ தேவி - அஜித்- போனி கபூர்
  • News18
  • Last Updated: August 13, 2019, 2:12 PM IST
  • Share this:
”என்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித் இல்லாமல் இது சாத்தியமே இல்லை” என்று போனி கபூர் கூறியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று. அவருக்கும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ட்விட்டரில் அவர், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ஜான். வாழ்வில் ஒவ்வொரு நொடியும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு துணையாக நீ இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஐ லவ் யு’ என்று பதிவிட்டுள்ளார்.சில தினங்களுக்கு முன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘என்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இல்லாமால் இது சாத்தியமில்லை. நேர்கொண்ட பார்வை படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 8-ம் தேதி வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகம், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது

சென்னையில் மட்டும் முதல் 5 நாட்களில் இப்படம் 6.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் முதல் வார இறுதியில் வெளிநாட்டில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

Also watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்