என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் விவாதம் நடக்கிறது - ஐஸ்வர்யா ராஜேஷ்!

என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் விவாதம் நடக்கிறது - ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
  • Share this:
தமிழ் நடிகையா தெலுங்கு நடிகையா என சமூகவலைதளங்களில் விவாதம் நடப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழில் நல்ல கதையம்சங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கனா படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. தமிழில் இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த ஆண்டு வெளியானது.

இத்திரைப்படத்தை அடுத்து தெலுங்கு சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு படவாய்ப்புகள் குவிந்தன. ஆனால் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதுகுறித்து தற்போது பேட்டியளித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கனா திரைப்படம் பிடித்துதான் தயாரிப்பாளர் கே.எஸ்.ராமராவ் தெலுங்கில் இத்திரைப்படத்தை தயாரித்தார். 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.


பிரபாஸின் சாஹோ வெளியான சில நாட்களில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி வெளியானது. படம் சரியாக ஓடவில்லை. ஒரு படம் திரையரங்கில் ஒருவாரம் ஓடினால் அந்தப் படத்தை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். காசு செலவழித்து புதுமுகத்தின் படத்தைப் பார்க்க மக்கள் யோசிப்பார்கள். ஆனால் சமீபத்தில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது படத்தைப் பாராட்டுகின்றனர்” என்றார்.

தெலுங்கில் படம் நடிக்கிறீர்கள் சென்னை நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நான் யூடியூப், இன்ஸ்டாகிராமில் வரும் கமெண்ட்களை கவனிக்கிறேன். அதில் நான் தெலுங்கு நடிகையா, தமிழ் நடிகையா என்று விவாதம் நடிக்கிறது.

என் அம்மாவுக்கு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோருடன் நான் நடிக்க வேண்டும் என்று ஆசை. தெலுங்குப் படங்கள் பார்த்துதான் நாம் வளர்ந்தோம். எனக்கு தெலுங்கில் எழுத, பேச, படிக்கத் தெரியும். தமிழ், தெலுங்கு என இரண்டு கலாச்சாரம் தொடர்பான பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடுவோம்” என்று கூறினார்.மேலும் படிக்க: பொல்லாதவன் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ட்ரெய்லர் ரிலீஸ் - டேனியல் பாலாஜி கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராம்!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்