Dhanush: ’ஜகமே தந்திரம்’ படத்தில் ரஜினி சாயலில் நடித்துள்ளேன் - தனுஷ்!

தனுஷ்

மாரி போன்று ஜகமே தந்திரம் சுருளி கதாபாத்திரமும் மனதுக்கு நெருக்கமானது என்பதால் மாரி 2 போல் ஜகமே தந்திரம் இரண்டாம் பாகமும் வர வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

  • Share this:
    ஜுன் 18-ம் தேதி ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. திரையரங்கில் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட வேண்டிய படம் ஓடிடியில் வெளியாவதில் ரசிகர்களைப் போலவே தனுஷுக்கும் ஏமாற்றம் தான். ஆனால், கொரோனா பேரிடர் காலத்தில் இதையெல்லாம் பெரிதாக கருத முடியுமா?

    தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். இவர் அங்கு சென்ற நேரம் கொரோனா அலை தீவிரமாக, அங்கு மாட்டிக் கொண்டார். ஜகமே தந்திரம் வெளியாவதையொட்டி, அங்கிருந்தபடி ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் தனுஷ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜகமே தந்திரம் படம் குறித்து பேசியிருப்பவர், சுருளி கதாபாத்திரத்தில் ரஜினி சாயலில் நடித்திருக்கிறேன். அதனை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும் அனுமதித்தார் என கூறியுள்ளார். மேலும், மாரி போன்று ஜகமே தந்திரம் சுருளி கதாபாத்திரமும் மனதுக்கு நெருக்கமானது என்பதால் மாரி 2 போல் ஜகமே தந்திரம் இரண்டாம் பாகமும் வர வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

    தனுஷ் அடுத்து செல்வராகவன், மாரி செல்வராஜ் உள்பட பலர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் இந்திப் படமும் அடக்கம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: