Home /News /entertainment /

கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியிட்ட படம் விக்ரம்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி

கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியிட்ட படம் விக்ரம்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி

75 கோடி ஷேர் என சொல்லும் இந்த நேர்மை முன்பே இருந்திருந்தால் என்று தமிழ் சினிமா இந்தி சினிமாவை தாண்டியிருக்கும் என மேடையில் உதயநிதியை கமல்ஹாசன் புகழ்ந்து பேசினார்.

75 கோடி ஷேர் என சொல்லும் இந்த நேர்மை முன்பே இருந்திருந்தால் என்று தமிழ் சினிமா இந்தி சினிமாவை தாண்டியிருக்கும் என மேடையில் உதயநிதியை கமல்ஹாசன் புகழ்ந்து பேசினார்.

75 கோடி ஷேர் என சொல்லும் இந்த நேர்மை முன்பே இருந்திருந்தால் என்று தமிழ் சினிமா இந்தி சினிமாவை தாண்டியிருக்கும் என மேடையில் உதயநிதியை கமல்ஹாசன் புகழ்ந்து பேசினார்.

  கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.

  கமல் தயாரிப்பில் உருவான படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் படம் குவித்து வருகிறது. மல்டி ஸ்டார்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதாலும், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததாலும், விக்ரம் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படமும் அமைந்ததால் தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

  இந்நிலையில் விக்ரம் படம் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களளை சந்தித்தனர். இந்த சந்திப்பில் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ்ராஜ், உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

  அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று ஒருவராக யாரும் கூற முடியாது. ஒரு 200 பேர் பணிபுரியும் இடத்தில் ஒருவர் தவறு செய்தால் கூட படத்தின் தோல்விக்கு அது காரணமாக இருந்துவிடக்கூடும். இப்போது, அனிருத் என்று சொல்கிறோம் என்றால், அவரின் பின்னால் 12 பேர் இருப்பார்கள், ராஜ்கமலில் 40 பேர் இருக்கிறார்கள்.

  சினிமா வாழ்க்கையில் வேலை கிடைத்தால் போதும் என்று வந்தவன் நான். எனக்கு நடிப்பை எல்லாம் கிளப்பி விட்டது பாலச்சந்தர் தான். என்னை நடிக்க சொல்லி நடிக்க வைத்தவர் பாலச்சந்தர் தான். கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியிட்ட படம் விக்ரம். அதற்கு காரணம் மகேந்திரன் மற்றும் உதயநிதி தம்பிகள் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி பண்ணியபோது, பலர் கிண்டல் செய்தனர். சின்னத்திரை வேண்டாம் என்றனர். நல்லவேளை சுதாரித்துக்கொண்டேன். என்னுடைய பிரமோஷனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலே ஆரம்பித்துவிட்டேன். ஆனால், அது எந்த படமாக இருக்கும் என தெரியாமல் இருந்தது. விக்ரம் படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்த வெற்றி எனக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை.

  எல்லாரும் சொல்கிறார்கள் கார் கொடுத்தார், மோட்டர் சைக்கிள் கொடுத்தார், எனக்கு படமே கொடுத்தார் என்றெல்லாம், எல்லாத்தையும் விட தமிழக மக்கள் தினமும் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை நமக்கு கொடுத்தார்கள். அதுதான் உண்மையான பெரிய கிப்ட். தினக்கூலிகள் எல்லாம் வந்து பார்த்து எனக்கு கொடுத்தது பெரிய பரிசு. பண்டிகை நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் இல்லை, உங்கள் படத்தை பண்டிகையாக கொண்டாட வேண்டும் என அன்புசெழியன் என்னிடம் கூறினார். அதேபோல், எங்கள் படத்தை பண்டிகை போல் மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

  என் திறமைக்கு அதிகமாக தமிழக மக்கள் என்னை தூக்கிப்பிடுத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நல்ல படத்தை ரசிகர்கள் விடமாட்டார்கள், அந்த நல்ல படம் என்ன என்பதை ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து பாடம் படித்து, என்னுடைய ரசிகர் என்கிறார், சீடன் என்கிறார், எதுவாகவும் இருக்கட்டும் நிறைய கற்றுக்கொடுக்க வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உதயநிதியின் தந்தை இந்த வேலை நமக்கு எதற்கு, நம் வேலையை பார்ப்போம் என்று கூறியதாக கேள்விப்பட்டேன். உதயநிதி விநியோகத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த நேர்மை இருந்தால், இன்னும் பலர் பிழைப்பார்கள். 75 கோடி ஷேர் என சொல்லும் இந்த நேர்மை முன்பே இருந்திருந்தால் என்று தமிழ் சினிமா இந்தி சினிமாவை தாண்டியிருக்கும்.

  லோகேஷ் அடுத்தப்படத்திற்கு செல்கிறார். அந்தப் படத்தில் ஏதேனும் பயம், சந்தேகம் இருந்தாலும் என்னிடம் வாருங்கள். லோகேஷ் எடுக்கும் அடுத்தப் படத்தை போட்டி படமாக பார்க்கவில்லை. அந்தப் படம் முடிந்துவிட்டு வரும் போது அடுத்து வரும் விக்ரம் படம் எப்படி இருக்கும் என பாருங்கள் என்று அவர் கூறினார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Kamalhaasan, Lokesh Kanagaraj, Udhayanidhi Stalin, Vikram

  அடுத்த செய்தி