அவதார் என்ற டைட்டிலை நான் தான் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு கொடுத்தேன் - பாலிவுட் நடிகர் கோவிந்தா

அவதார் 2 டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

news18
Updated: July 30, 2019, 5:02 PM IST
அவதார் என்ற டைட்டிலை நான் தான் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு கொடுத்தேன் - பாலிவுட் நடிகர் கோவிந்தா
அவதார்
news18
Updated: July 30, 2019, 5:02 PM IST
அவதார் என்ற டைட்டிலை நான் தான் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு கொடுத்தேன் என்று பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான படம் அவதார். உலகளவில் இந்தப் படம் 2.78 பில்லியன் (19,000 கோடிக்கு மேல்) வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 2016-ம் ஆண்டில் அறிவித்தார்.

அவதார் 2 டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் அவதார் 3, 4,5 படங்களும் 2023, 2025, 2027 ஆகிய வருடங்களில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் அவதார் படத்திற்காக நான் உதவி செய்துள்ளேன் என்று பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘அவதார் என்ற டைட்டிலை நான் தான் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு கொடுத்தேன். இந்த படம் வெற்றியடையும் என்றேன். இந்த படத்தை எடுப்பது கஷ்டம், 7 வருடம் ஆகும் என்று அவரிடன் கூறினேன். அவர் என் மீது கோபப்பட்டார். எப்படி 7 வருடம் ஆகும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார். முடியாத ஒன்றை கற்பனை செய்து பார்க்கிறீர்கள் என்று கூறினேன். நான் சொன்னது போல படம் 8 ஆண்டுகள் கழித்தே வெளிவந்தது. படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கேம்ரூன் விரும்பினார். 410 நாட்கள் கால்ஷிட் கேட்டார். உடம்பு முழுக்க பெயிண்ட் புசிக்கொண்டு நடிக்க முடியாது என்பதால் அதை மறுத்தேன் என்றும் நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.

Also watch

Loading...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...