அயர்ன் மேனும் நான் தான் தானோஸும் நான்தான்: விஜய் சேதுபதி கலக்கல் பதில்!

நாம் எடுப்பது எல்லாமே சூப்பர் ஹீரோ படம்தான் என்று விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

news18
Updated: April 5, 2019, 1:47 PM IST
அயர்ன் மேனும் நான் தான் தானோஸும் நான்தான்: விஜய் சேதுபதி கலக்கல் பதில்!
அவெஞ்சர்ஸ்
news18
Updated: April 5, 2019, 1:47 PM IST
அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச பயந்தேன் என்று விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.

விழாவில் விஜய் சேதுபதி, ‘அவெஞ்சர்ஸ் படத்தில் எனக்கு அயன் மேன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். இந்த திரைப் படத்திற்கான டப்பிங் பேசும் போது ஆரம்பத்தில் மிகவும் கஷடப்பட்டேன், பயந்தேன். பிறகு அதை கற்றுக் கொண்டேன்’ என்று பேசியுள்ளார்

ஒவ்வொரு கதாபாத்திரங்களில் நடிக்கும் போதும் அதற்கு முன் பயிற்சி எடுத்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அத்தகைய பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை என்றும், தனக்கு எது வருகிறதோ அதை செய்வதாகவும், அந்த கதாபாத்திரத்தின் குணத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு அதை வெளிப்படுத்துவதாகவும் விஜய்சேதுபதி பதிலளித்துள்ளார்.

வெளிநாட்டுப் படங்களை போல் தமிழில் ஏன் சூப்பர் ஹீரோ கதைகள் வெளியாவதில்லை என்ற கேள்விக்கு, ‘நாம் எடுப்பது எல்லாமே சூப்பர் ஹீரோ படம்தான். இங்கு கதாநாயகன் அடித்தாலே சூப்பர் ஹீரோக்கள் அடிப்பது போல வில்லன்கள் பறக்கிறார்கள் என நகைச்சுவையாக விஜய் சேதுபதி பதிலளித்தார்.

அயர்ன் மேன் மாதிரி பேசனும் ஷில்பா மாதிரி பேசக்கூடாது: விஜய்சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!


 

நம் ஆட்கள் மோசம்: அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!


 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also Watch

 
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...